ஒலிம்பிக்கிற்கு தகுதி; பவானி தேவிக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பே உதவிய நடிகர் சசிக்குமார்!

ஒலிம்பிக்கிற்கு தகுதி; பவானி தேவிக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பே உதவிய நடிகர் சசிக்குமார்!

ஒலிம்பிக்கிற்கு தகுதி; பவானி தேவிக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பே உதவிய நடிகர் சசிக்குமார்!
Published on

ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளார் தமிழக வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி. அவர், இன்று ஒலிம்பிக் தகுதிச் சுற்றுவரை வருவதற்கு நடிகர் சசிகுமாரின் உதவியும் ஊக்கமும் ஒரு காரணமாய் அமைந்திருக்கிறது.

டோக்கியோவில் வரும் ஜூலை 23-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான தனிநபர் வாள்வீச்சு பிரிவில் கலந்துகொள்ள பவானி தேவி தேர்வாகியுள்ளார். இதன்மூலம், ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற இந்தியாவின் முதல் வாள்வீச்சு போட்டியாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

8 முறை தேசிய சாம்பியனான பவானிதேவிக்கு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் உள்ளிட்டப் பலர் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். பவானி தேவி ஒலிம்பிக் வரை தகுதி பெற்றதற்கு ஊக்கமாய் இருந்துள்ளார் நடிகர் சசிகுமார். 6 வருடங்களுக்கு முன்பு இத்தாலியில் நடந்த வாள்சண்டை போட்டியில் கலந்துகொள்ள வசதியின்றி தவித்தபோது நடிகர் சரிகுமார் 2 லட்சம் ரூபாய் கொடுத்து உதவியுள்ளார். அப்போது, ஒரு ஆட்டோவில் தன் அம்மாவுடன் வந்து சசிகுமாருக்கு நன்றி சொல்லி சென்றுள்ளார்.

” இந்தத் தகவலை ’கத்துக்குட்டி’ பட இயக்குநர் இரா.சரவணன் தந்து ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். மீண்டும் சசிக்குமார் ஒலிம்பிக்கிற்கு தகுதிப்பெற்றுள்ள பவானி தேவிக்கு வாழ்த்துகள் சொல்லி ஊக்கப்படுத்தியிருக்கிறார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com