\
சசிகுமார் ஜோடி ஆனார் நிக்கி கல்ராணி

சசிகுமார் ஜோடி ஆனார் நிக்கி கல்ராணி

சசிகுமார் ஜோடி ஆனார் நிக்கி கல்ராணி
Published on

இன்னும் பெயரிடப்படாத படத்தில் சசிகுமார் ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். 

சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள ‘நாடோடிகள் 2’ படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதற்கிடையே, எஸ்.ஆர்.பிரபாகர் இயக்கும் ’கொம்பு வச்ச சிங்கம்டா’, சுசீந்திரனின் ’கென்னடி கிளப்’ படங்களில் நடித்து வருகிறார், சசிகுமார்.

இதையடுத்து அவர் நடிக்கும் படத்தை சுந்தர்.சி யிடம் உதவியாளராக இருந்த கதிர்வேலு இயக்குகிறார். இது சசிகுமாருக்கு 19 படம். இதில் ஐ.டி.யில் பணியாற்றுபவராக சசிகுமார் நடிக்கிறார். செந்தூர் பிலிம்ஸ் சார்பில் டிடி.ராஜா தயாரிக்கிறார். சித்தார்த் ஒளிப்பதிவு செய்கிறார். சாம்.சிஎஸ் இசை அமைக்கிறார். 

இதில் சசிகுமார் ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். மற்றும் ராதா ரவி, தம்பி ராமையா, விஜயகுமார் ,ரேகா, சதிஷ், மனோபாலா, சிங்கம் புலி, நிரோஷா, யோகி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் வரும் 11 ஆம் தேதி தொடங்குகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com