சசிகுமார் நடிக்கும் ‘அயோத்தி’: பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு

சசிகுமார் நடிக்கும் ‘அயோத்தி’: பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு
சசிகுமார் நடிக்கும் ‘அயோத்தி’: பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு

நடிகர் சசிகுமார் நடிக்கும் ‘அயோத்தி’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.

பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடைசியாக ‘எம்.ஜி.ஆர் மகன்’ வெளியானது. அதனைத்தொடர்ந்து வரும் நவம்பர் 26 ஆம் தேதி ‘கொம்பு வச்ச சிங்கமடா’, ‘ராஜ வம்சம்’ உள்ளிட்டப் படங்கள் வெளியாகவிருக்கின்றன. இந்த நிலையில், சசிகுமார் நடிக்கும் அடுத்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இப்படத்திற்கு ‘அயோத்தி’ என்று பெயரிட்டுள்ளனர். மந்திர மூர்த்தி இயக்குகிறார். ரவீந்திரன் தயாரிக்கிறார். சசிகுமாருடன் ‘குக் வித் கோமாளி’ புகழ், போஸ் வெங்கட் நடிக்கிறார்கள். இப்படத்தின் பூஜை இன்று முதல் துவங்கியுள்ளது. மதுரை மற்றும் ராமேஸ்வரம் சுற்றுவட்டார பகுதிகளில் 45 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும் என்று இயக்குநர் மந்திர மூர்த்தி கூறியுள்ளார்.

படத்தை பற்றி அவர் மேலும் கூறுகையில், "எல்லோரும் வாழ்நாளில் ஒருமுறையாவது சந்திக்கும் ஒரு விஷயத்தைப் பற்றியது இந்தப் படம். இந்த கதையோடு மக்கள் அவர்களை எளிதில் தொடர்பு படுத்திக்கொள்ள முடியும். நாம் வாழும் உலகின் மறுபக்கத்தைக் காட்டும் உணர்ச்சிகரமான ஒரு கதை இது. கதையை கேட்டவுடன் சசிகுமார் இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார்" என்றார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com