நேரடியாக ஓடிடியில் வெளியாகும் சசிக்குமாரின் ‘எம்ஜிஆர் மகன்’?

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் சசிக்குமாரின் ‘எம்ஜிஆர் மகன்’?
நேரடியாக ஓடிடியில் வெளியாகும் சசிக்குமாரின் ‘எம்ஜிஆர் மகன்’?

சசிக்குமாரின் ‘எம்ஜிஆர் மகன்’ நேரடியாக ஓடிடியில் வெளியாகவிருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

சசிக்குமார் நடிப்பில் சமீபத்தில் ‘உடன்பிறப்பே’ அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ பொன்ராம் இயக்கத்தில் சசிக்குமார் நடித்துள்ள ‘எம்ஜிஆர் மகன்’ தீபாவளியையொட்டி நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது. சசிக்குமாருக்கு ஜோடியாக மிர்னாளினி ரவி நடிக்கிறார். 

சத்யராஜ், சமுத்திரக்கனி உள்ளிட்டவர்கள் நடித்துள்ள, இப்படம் கடந்த ஆண்டே வெளியாகவிருந்தது. ஆனால், கொரோனாவால் தள்ளிப்போனது. இந்த நிலையில், வரும் தீபாவளியையொட்டி நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகவுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. தீபாவளியையொட்டி சூர்யாவின் ‘ஜெய் பீம்’ நவம்பர் 2 ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com