சர்ச்சை பேச்சு : 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் இருந்து நடிகர் சரவணன் நீக்கம்

சர்ச்சை பேச்சு : 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் இருந்து நடிகர் சரவணன் நீக்கம்
சர்ச்சை பேச்சு : 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் இருந்து நடிகர் சரவணன் நீக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நடிகர் சரவணன் நீக்கப்பட்டுள்ளார். 

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் நிகழ்ச்சியின் போது போட்டி பங்கேற்பாளர்களிடன் பேசிய கமல்ஹாசன், பேருந்தில் பெண்களை உரசுவது போலான பாலியல் தொந்தரவுகள் குறித்து பேசினார். அப்போது போட்டி பங்கேற்பாளர்களில் ஒருவரான நடிகர் சரவணன், தன் கையை உயர்த்தி தானும் கல்லூரி நாட்களில் அவ்வாறு செய்திருப்பதாக தெரிவித்தார். உடனடியாக அங்கு கூடியிருந்த பார்வையாளர்களும் சிரித்து மகிழ்ந்து கைதட்டி ஆரவாரம் செய்தனர். 

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் இந்தச் சம்பவத்திற்கு சமூக வலைத்தளங்களில் பாடகி சின்மயி உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து வந்த நிகழ்ச்சியில் தன்னை போல யாரும் தவறு செய்யாக்கூடாது எனவும், தான் கூறிய கருத்துக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும் சரவணன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சரவணன் கூறிய கருத்து ஏற்கத்தக்கதல்ல என்பதால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com