மட்டன், சிக்கன் சமையலில் கலக்கும் சரத்குமார்.... ஊரடங்கில் கற்றுக்கொண்ட கலை
எப்போதும் பிட்னஸில் ஆர்வம் கொண்ட நடிகர் சரத்குமார், தற்போது ஊரடங்கு நாட்களில் பொழுதுபோக்காக சமையல் கலை பக்கம் திரும்பியுள்ளார். தினமும் ஒன்றரை மணி நேரம் உடற்பயிற்சிக்காகச் செலவிடும் அவர், கொஞ்சம் சமையலும் செய்துபார்க்க ஆசைப்பட்டதாகக் கூறியுள்ளார்.
சிறுவயது முதலே தனது அம்மாவின் சமையல் ருசிக்கு அடிமையான சரத், ஊரடங்கு நாட்களில் சமையல் கலையை கூர்ந்து கவனித்துக் கற்றுக் கொண்டுள்ளார். தினமும் கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் சமையலில் ஈடுபட்டு, பிரியாணி, மட்டன் மற்றும் சிக்கன் என அசைவ உணவை சுவையாக சமைப்பதில் நன்றாகவே தேர்ந்துவிட்டாராம்.
இப்போது விதவிதமான சமையலில் தேர்ச்சி பெற்றதாகக் கூறியுள்ள சரத்குமார், ஒருவேளை தொழிலை மாற்றிக்கொள்ள நேர்ந்தால் ஒரு ரெஸ்ட்டாரண்ட் தொடங்கும் அளவுக்கு அசாத்தியமான நம்பிக்கை வந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். இனிமேல் அஜித்குமார்போல திரையுலக நண்பர்கள் சரத்குமாரிடம் இருந்தும் சுவையான பிரியாணியை எதிர்பார்க்கலாம் என பலரும் பேசுகின்றனர்.