மீண்டும் காமெடியன் வேடத்திற்கு திரும்பும் நடிகர் சந்தானம்?

மீண்டும் காமெடியன் வேடத்திற்கு திரும்பும் நடிகர் சந்தானம்?
மீண்டும் காமெடியன் வேடத்திற்கு திரும்பும் நடிகர் சந்தானம்?

தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வரும் சந்தானம், மீண்டும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சின்னத்திரையிலிருந்து வந்த சந்தானம், வெள்ளித்திரையில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், சிறுத்தை, தெய்வத் திருமகள், ஒரு கல் ஒரு கண்ணாடி, தீயா வேலை செய்யணும் குமாரு, ராஜா ராணி உள்ளிட்ட பல படங்களில் காமெடி நடிகராக அழுத்தமான தாக்கத்தையும் ஏற்படுத்தினார்.

பின்னர், கண்ணா லட்டு தின்ன ஆசையா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், தில்லுக்கு துட்டு உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடிக்கத் துவங்கினார். இந்நிலையில், நகைச்சுவை நடிகராக இருந்த போதுதான் ரசிகர்களிடம் செல்வாக்கு இருந்ததாக அவரது நண்பர்கள் சிலர் ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது. இதனால் மீண்டும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிப்பது குறித்து சந்தானம் தீவிர யோசனையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com