இயக்குநர் ஷங்கர் உதவியாளர் படத்தில் நடிகர் சந்தானம்! அடுத்த படத்துக்கான பணி தொடக்கம்?!

இயக்குநர் ஷங்கர் உதவியாளர் படத்தில் நடிகர் சந்தானம்! அடுத்த படத்துக்கான பணி தொடக்கம்?!
இயக்குநர் ஷங்கர் உதவியாளர் படத்தில் நடிகர் சந்தானம்! அடுத்த படத்துக்கான பணி தொடக்கம்?!

நடிகர் சந்தானம் அடுத்த படத்தை, இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கோவர்தன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அப்படத்தில், 5 கெட்டப்களில் சந்தானம் நடிப்பார் என தெரிகிறது.

சமீபத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் 'குளுகுளு' திரைப்படம் வெளியாகியிருந்தது. அந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் நடிப்பில் ஏஜெண்ட் கண்ணாயிரம், சர்வர் சுந்தரம் ஆகிய படங்கள் ரிலீஸூக்கு தயாராகிவருகிறது. அவற்றை தொடந்து, சந்தானம் கோவர்தன் இயக்கத்தில் நடிப்பார் என தெரிகிறது.

இந்த புதிய படத்திற்கான கதையில் சமீபத்தில்தான் கோவர்தன் சந்தானத்தை சந்தித்து கூறியிருக்கிறார். காமெடி, ஃபான்டஸி கலந்த அப்படத்தின் கதை சந்தானத்திற்கு மிகவும் பிடிக்கவே, படத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டுள்ளார் என்றும், இப்படத்தில் 5 முதல் 7 வெவ்வேறு கெட்டப்களில் சந்தானம் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தை டிரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இதே டிரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம், இயக்குநர் ஷங்கரின் மற்றுமொரு உதவியாளரின் படத்தையும் தயாரிக்கிறது. அந்த இயக்குநர், அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா. அப்படத்தில் நயன்தாரா முதன்மை கதாபாத்திரம் ஏற்கிறார். நயன்தாராவின் 75-வது திரைப்படமான அதில் அவருடன் ஜெய், சத்யராஜ் ஆகியோர் நடிக்க உள்ளனர்.

சந்தானம் - கோவர்தன் படத்தின் முதற்கட்ட பணிகளை தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளதாகவும், விரைவில் படபிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் தெரிகிறது. இன்னும் அதிகாரபூர்வ தகவல்கள் வெளிவரவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com