\
பிரகாஷ் ராஜ் விலகல்: ஹரி - அருண் விஜய் படத்தில் இணைந்த நடிகர் சமுத்திரக்கனி

பிரகாஷ் ராஜ் விலகல்: ஹரி - அருண் விஜய் படத்தில் இணைந்த நடிகர் சமுத்திரக்கனி

பிரகாஷ் ராஜ் விலகல்: ஹரி - அருண் விஜய் படத்தில் இணைந்த நடிகர் சமுத்திரக்கனி
Published on

இயக்குநர் ஹரியின் ‘அருண் விஜய் 33’ படத்தின் படப்பிடிப்பில் நடிகர் சமுத்திரக்கனி இணைந்திருக்கிறர்.

இயக்குநர் ஹரியும் அருண் விஜய்யும் முதன்முறையாக ‘அருண் விஜய் 33’ படத்தில் இணைந்துள்ளனர். கொரோனா இரண்டாவது அலைக்கு முன்பு கடந்த மார்ச் மாதம் தொடங்கிய, இப்படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கால் தடைப்பட்டுப் போனது. இந்த நிலையில், தற்போது அரசு படப்பிடிப்பு நடத்த அனுமதி அளித்துள்ளதால் மீண்டும் கடந்த ஜூலை 28 ஆம் தேதிமுதல் ராமேஸ்வரம், தூத்துக்குடி, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர

யோகி பாபு, சினேகேன், ராதிகா,கங்கை அமரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த நிலையில், நடிகர் சமுத்திரக்கனி ‘அருண் விஜய் 33’ படத்தில் இணைந்திருக்கிறார். அருண் விஜய்க்கு அண்ணனாக நடிக்கிறார். முதலில், இந்தக் கதாபாத்திரத்துக்கு நடிகர் பிரகாஷ் ராஜ்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டார். சமீபத்தில், அவருக்கு தோள்பட்டையில் விபத்து ஏற்பட்டு அறுவை சிகிச்சை நடந்துள்ளதால் ‘அருண் விஜய் 33’ படத்திலிருந்து விலகியிருக்கிறார். இதனால், பிரகாஷ் ராஜுக்குப் பதில் சமுத்திரக்கனி ஒப்பந்தம் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com