அயோத்திதாசர் முதல் சிங்காரவேலர் வரை: கவனம் ஈர்க்கும் சமுத்திரகனியின் ‘பப்ளிக்’ போஸ்டர்

அயோத்திதாசர் முதல் சிங்காரவேலர் வரை: கவனம் ஈர்க்கும் சமுத்திரகனியின் ‘பப்ளிக்’ போஸ்டர்
அயோத்திதாசர் முதல் சிங்காரவேலர் வரை: கவனம் ஈர்க்கும் சமுத்திரகனியின் ‘பப்ளிக்’ போஸ்டர்

சமுத்திரக்கனி மற்றும் காளி வெங்கட் நடித்துள்ள ‘பப்ளிக்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

நடிகர் சமுத்திரக்கனி நடிப்பில் சமீபத்தில் தியேட்டர்களில் ‘ரைட்டர்’ படமும் ஓடிடியில் ‘சித்திரை செவ்வானம்’ படமும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், நடிகர் சமுத்திரக்கனி காளி வெங்கட்டுடன் இணைந்து ‘பப்ளிக்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அறிமுக இயக்குநர் ரா.பரமன் இயக்க இமான் இசையமைத்துள்ளார்.

கே.கே.ஆர் சினிமாஸ் தயாரித்துள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் வெங்கட் பிரபுவும் நடிகர் விஜய் சேதுபதியும் வெளியிட்டிருக்கிறார்கள். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சிங்காரவேலர், பாரதிதாசன், கக்கன், அயோத்திதாச பண்டிதர், ஜீவானந்தம், நெடுஞ்செழியன், இரட்டைமலை சீனிவாசன்,காயிதே மில்லத் உள்ளிட்ட மக்கள் தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

முதல் படத்திலேயே சமூக மாற்றத்திற்காக போராடிய தலைவர்களை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இடம்பெறச் செய்து கவனம் ஈர்த்துள்ளார் இயக்குநர் ரா.பரமன். இதனால், படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com