\
சமுத்திரக்கனி - யோகிபாபு இணைந்து நடிக்கும் ’யாவரும் வல்லவரே’

சமுத்திரக்கனி - யோகிபாபு இணைந்து நடிக்கும் ’யாவரும் வல்லவரே’

சமுத்திரக்கனி - யோகிபாபு இணைந்து நடிக்கும் ’யாவரும் வல்லவரே’
Published on

நடிகர் சமுத்திரக்கனி - யோகி பாபு கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

நடிகர் சமுத்திரக்கனி விரைவில் வெளியாகவிருக்கும் ’தலைவி’, ‘எம்.ஜி.ஆர் மகன்’, ‘டான்’, ’ரைட்டர்’ உள்ளிட்ட பலப் படங்களில் உறுதுணை கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். அதேசமயம், ஹீரோவாகவும் நடித்து வருகிறார். சமீபத்தில், அவர் ஹீரோவாக நடித்த ’வெள்ளை யானை’ வெளியானது.

இப்படத்தில், யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த நிலையில், இக்கூட்டணி மீண்டும் ராஜேந்திர சக்ரவர்த்தி இயக்கத்தில் ‘யாவரும் வல்லவரே’ என்ற புதிய படத்தில் இணைந்துள்ளது. இப்படத்தில், சமுத்திரக்கனிக்கு ஜோடியாக ரித்விகா நடிக்கிறார். இவர்களுடன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ரமேஷ் திலக், இளவரசு, போஸ் வெங்கட், மயில்சாமி, ஜோ மல்லூரி, தேவ தர்ஷினி உள்ளிட்டோர் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com