\
ஏப்ரலில் வெளியாகும் சல்மான் கானின் ‘டைகர் 3’: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஏப்ரலில் வெளியாகும் சல்மான் கானின் ‘டைகர் 3’: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஏப்ரலில் வெளியாகும் சல்மான் கானின் ‘டைகர் 3’: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Published on

சல்மான் கானின் ‘டைகர் 3’ படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறார்கள் படக்குழுவினர்.

பிரபுதேவாவின் ‘ராதே’ படத்திற்குப்பிறகு சல்மான் கான் ‘டைகர் 3’ படத்தில் நடித்து முடித்துள்ளார். நாயகியாக கத்ரீனா கைஃப் நடித்துள்ள இப்படத்தை, மனீஷ் ஷர்மா இயக்கியுள்ளார். ஸ்பை த்ரில்லர் கதைக்களத்தைக் கொண்ட ’டைகர் 3’ படப்பிடிப்பு ரஷ்யா, துருக்கி, ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்த நிலையில், நடிகர் சல்மான் கான் படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறார்.

வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி உலகம் முழுக்க ‘டைகர் 3’ வெளியாகிறது. ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ள இப்படம் ஈகை பெருநாளையொட்டி வெளியாகிறது. இதற்கு முன்பு, சல்மான் கானும் கத்ரீனா கைஃபும் கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ‘பாரத்’ படத்தில் நடித்திருந்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com