அரசியலுக்கு வரவில்லை ஆர்.ஜே.பாலாஜி.. வெளியானது ரீமேக் ரகசியம்

அரசியலுக்கு வரவில்லை ஆர்.ஜே.பாலாஜி.. வெளியானது ரீமேக் ரகசியம்

அரசியலுக்கு வரவில்லை ஆர்.ஜே.பாலாஜி.. வெளியானது ரீமேக் ரகசியம்
Published on

ஆர்.ஜே.பாலாஜி அரசியலில் களமிறங்கப் போவதாக தகவல் வெளியான நிலையில் அவர் கன்னடத்தில்  படத்தின் தமிழ் பாகத்தில் நடிப்பதற்காவே அந்தச்சுவர் விளம்பரம் எனத் தகவல் கிடைத்துள்ளது. 

திரைப்பட நடிகரும், தொகுப்பாளருமான ஆர்.ஜே.பாலாஜி அரசியலில் களமிறங்கப் போவதாக ஒரு சுவர் விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்தச் சுவர் ஓவியத்தில் சிவப்பு, கருப்பு, பச்சை நிறத்தில் ஆன கொடியும், அதைசுற்றி மஞ்சள் நிறமும் நிரப்பப்பட்டுள்ளது. கொடியின் மையத்தில் காளையின் படம் இடம்பெற்றுள்ளது. இருப்பினும் இந்தச் சுவர் ஓவியம் எந்த இடத்தில் வரையப்பட்டுள்ளது என்ற தகவல்கள் இல்லாமல் இருந்தது. 

ஆனால் இந்தப்படம் சமூக வலைத்தளத்தில் பரவி வந்தது. இந்நிலையில் ஆர்.ஜே.பாலாஜி சமூக வலைத்தளமான ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் தனது சுயவிபர (Profile Picture) படங்களை மாற்றியுள்ளார். அதில் சுவர் விளம்பரத்தில் இருந்தக் கொடி இடம்பெற்றுள்ளது. முன்னதாக அந்தச் சுவர் விளம்பரத்தில் மே18 அரசியல் களம் புகும் ஆர்.ஜே.பாலாஜி வருக என எழுதப்பட்டிருந்தது. இதுகுறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் இருந்த ஆர்.ஜே.பாலாஜி தற்போது ட்விட்டரில் அந்தக் கொடியை பதிவிட்டுள்ளார். ஏற்கனவே சமூக அக்கரை கொண்ட நபராக அறியப்பட்ட ஆர்.ஜே.பாலாஜி, அரசியலுக்கு வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. 

இந்நிலையில் புதியதலைமுறைக்கு கிடைத்த பிரத்யேகமான தகவல்படி கன்னடத்தில் வெளியான ‘ஹம்புல் பொலிடிஷன் நொக்ராஜ்’ என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்ய இருப்பதாகவும் அதில் ஆர்.ஜே.பாலாஜி  நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 18ம் தேதி வெளி வரும் எனத் தெரிகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com