ஆர்.ஜே.பாலாஜி அரசியலில் எண்ட்ரி ? நெக்ஸ்ட் அப்டேட்
ஆர்.ஜே.பாலாஜி அரசியலில் களமிறங்க போவதாக வரையப்பட்ட சுவர் விளம்பரத்தை மெய்பிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.
திரைப்பட நடிகரும், தொகுப்பாளருமான ஆர்.ஜே.பாலாஜி அரசியலில் களமிறங்க போவதாக ஒரு சுவர் விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த சுவர் ஓவியத்தில் சிவப்பு, கருப்பு, பச்சை நிறத்தில் ஆன கொடியும், அதைசுற்றி மஞ்சள் நிறமும் நிரப்பப்பட்டுள்ளது. கொடியின் மையத்தில் காளையின் படம் இடம்பெற்றுள்ளது. இருப்பினும் இந்த சுவர் ஓவியம் எந்த இடத்தில் வரையப்பட்டுள்ளது என்ற தகவல்கள் இல்லை. ஆனால் இந்தப்படம் சமூக வலைதளத்தில் பரவி வந்தது. இந்நிலையில் ஆர்.ஜே.பாலாஜி சமூக வலைதளமான ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் தனது சுயவிவர (Profile Picture) படங்களை மாற்றியுள்ளார். அதில் சுவர் விளம்பரத்தில் இருந்த கொடி இடம்பெற்றுள்ளது. முன்னதாக அந்த சுவர் விளம்பரத்தில் மே18 அரசியல் களம் புகும் ஆர்.ஜே.பாலாஜி வருக என எழுதப்பட்டிருந்தது. இதுகுறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்த ஆர்.ஜே.பாலாஜி தற்போது ட்விட்டரில் அந்தக் கொடியை பதிவிட்டுள்ளார்.