\
ஆகஸ்ட் 27-ல் நிறைவடையும் அண்ணாத்த இறுதிக்கட்டப் படப்பிடிப்பு

ஆகஸ்ட் 27-ல் நிறைவடையும் அண்ணாத்த இறுதிக்கட்டப் படப்பிடிப்பு

ஆகஸ்ட் 27-ல் நிறைவடையும் அண்ணாத்த இறுதிக்கட்டப் படப்பிடிப்பு
Published on: 

ரஜினியின் ’அண்ணாத்த’ முழு படப்பிடிப்பும் ஆகஸ்ட் 27 ல் நிறைவடைகிறது.

'தர்பார்' படத்திற்கு பிறகு நடிகர் ரஜினி ’சிறுத்தை’ சிவா இயக்கத்தில் 'அண்ணாத்த' படத்தில் நடித்து முடித்துள்ளார். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் 4-ஆம் தேதி படம் வெளியாகிறது.

சென்னையில் படமாக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு, பின் ஹைதராபாத், மேற்குவங்கம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றதைத் தொடர்ந்து சமீபத்தில், லக்னோவில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், வரும் 21 ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்கும் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு ஆகஸ்ட் 27 ஆம் தேதி நிறைவடைகிறது. அத்துடன், படத்திற்கான முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com