\
இன்று நடிகர் ராணா திருமணம்: கொரோனா சூழலால் நேரில் செல்லாமல் நடிகர்கள் ட்விட்டரில் வாழ்த்து

இன்று நடிகர் ராணா திருமணம்: கொரோனா சூழலால் நேரில் செல்லாமல் நடிகர்கள் ட்விட்டரில் வாழ்த்து

இன்று நடிகர் ராணா திருமணம்: கொரோனா சூழலால் நேரில் செல்லாமல் நடிகர்கள் ட்விட்டரில் வாழ்த்து
Published on

பாகுபலி பட புகழ் ராணா டகுபதியின் திருமணத்திற்கு பாலிவுட்டின் முன்னணி ஹீரோ அக்‌ஷய் குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். தெலுங்கின் முன்னணி ஹீரோ ராணா டகுபதி சில நடிகைகளுடன் காதல் கிசுகிசுவில் அடிபட்டவர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது காதலி மீஹா பஜாஜ் குறித்து அனைவருக்கும் அறிமுகம் செய்தார். நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் கடந்த மாதம் இவர்களின் நிச்சயத்தார்த்தம் நடைபெற்ற நிலையில் இன்று எளிமையாக  திருமணம் ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.

உற்சாகத்துடன் நடிகர் ராணா தனது தந்தை மற்றும் நடிகர் வெங்கடேஷுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு “நான் ரெடி” என்று குறிப்பிட்டுள்ளார். கொரோனா சூழலால் இத்திருமணத்திற்கு பிரபலங்கள் வரமுடியாத சூழலில் நடிகர் அக்‌ஷய் குமார் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இவரைப்போலவே பிரபலங்கள் பலரும் இத்தம்பதிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com