
சினிமாவில் எல்லாவற்றையும் அனுபவ பாடமாகத் தான் கற்றுக்கொண்டதாக நடிகர் ராணா தெரிவித்தார்.
சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் ராணா, “ 17 வயது இருக்கும்போதே வேலைக்கு வந்துவிட்டேன். ஏகப்பட்ட ஃபிலிம் ஸ்டூடியாவில் வேலை பார்த்துள்ளேன். சினிமாவை பொறுத்த வரையிலுமே பல வேலைகளை செய்துள்ளேன். இதற்காக பள்ளிக் கூடம் சென்றுதான் பாடம் படிக்க வேண்டும் என்றில்லை. எல்லாம் அனுபவ பாடம்தான். தினசரி புதுப்புது விஷயங்களை கற்றுக் கொள்வதே நமக்கான பலமாக அமையும். உண்மையில் என்னவாக வேண்டும் என்ற எண்ணம் சிறுவயதிலேயே இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அப்படி இருந்தால்தான் தினமும் நம்மால் புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளவும் ஆசை வரும்.
நடிகரும், முன்னாள் முதலமைச்சருமான என்டி ராமா ராவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கிறேன். எனவே அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க தேவையான அளவு எடையை குறைத்துள்ளேன். அரசியல் என்பது பல்வேறு சமூக மக்கள், வெவ்வேறு சிந்தனை கொண்ட மக்கள் என அனைவரையும் ஒன்றிணைப்பதே. அரசியல் நான் புரிந்துகொள்ளும் இடம் இல்லை என நினைக்கிறேன்” என தெரிவித்தார்.