நடிகர் ரமேஷ் திலக் திருமணம்: காதலியை கரம்பிடித்தார்

நடிகர் ரமேஷ் திலக் திருமணம்: காதலியை கரம்பிடித்தார்
நடிகர் ரமேஷ் திலக் திருமணம்: காதலியை கரம்பிடித்தார்

நடிகர் ரமேஷ் திலக், நவலட்சுமி காதல் திருமணம் சென்னையில் இன்று நடந்தது.

தமிழில், ’சூது கவ்வும்’, ’ஆரஞ்சு மிட்டாய்’, ’காக்கா முட்டை’, ’ஒருநாள் கூத்து’ ’ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ உட்படல பல படங்களில் காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்தவர் ரமேஷ் திலக். இவரும் சண்டை இயக்குனர் ராம்போ ராஜ்குமார் மகளுமான நவலட்சுமியும் காதலித்து வந்தனர்.

இவர்கள் காதலுக்கு இருவர் வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இவர்கள் திருமணம் இன்று காலை சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஆறுபடை வீடு முருகன் கோவிலில்  நடைபெற்றது. 

இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் திரைத்துறையினர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com