சிரஞ்சீவி மகனை இயக்குகிறார் மணிரத்னம்

சிரஞ்சீவி மகனை இயக்குகிறார் மணிரத்னம்

சிரஞ்சீவி மகனை இயக்குகிறார் மணிரத்னம்
Published on

கார்த்தி, அதிதி ராவ் நடிக்கும் ’காற்று வெளியிடை’ படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் மணிரத்னம். இந்தப் படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகிறது.

இதையடுத்து அவர் இயக்கும் படத்தில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகனும், நடிகருமான ராம் சரண் தேஜா நடிக்கிறார். தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தை மணிரத்னமே தயாரிக்கிறார். ஜூன் மாதம் தொடங்கும் இந்தப் படத்தில் அரவிந்த்சாமி வில்லன்.

ஏற்கனவே தெலுங்கு ஹீரோக்கள் நாகார்ஜுனா, மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்கத் திட்டமிட்டிருந்தார் மணிரத்னம். சில பிரச்னைகளால் அந்தப் படம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com