’கேஜிஎஃப்’ பிரஷாந்த் நீலுடன் இணையும் ராம் சரண்

’கேஜிஎஃப்’ பிரஷாந்த் நீலுடன் இணையும் ராம் சரண்
’கேஜிஎஃப்’ பிரஷாந்த் நீலுடன் இணையும் ராம் சரண்

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் ராம் சரண் நடிக்கவிருக்கிறார்.

தெலுங்கின் முன்னணி நடிகரான ராம் சரண் ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’படத்திலும் ஷங்கர் இயக்கதில் தற்போது, ‘ராம் சரண் 15’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக, கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘ஜெர்சி’ பட இயக்குநர் கெளதம் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இதற்கான, அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த வாரம் வெளியான நிலையில், ‘ராம் சரண் 17’ படத்தில் இயக்குநர் பிரஷாந்த் நீலுன் இணைந்திருக்கிறார். நேற்று, பிரஷாந்த் நீல் ராம் சரண் மற்றும் சிரஞ்சீவியை சந்தித்திருக்கிறார்.

இந்தப் புகைப்படத்தை பிரஷாந்த் நீல் மற்றும் ராம் சரண் உற்சாகமுடன் வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளனர். பிரஷாந்த் நீல் இயக்கத்தில், ‘கேஜிஎஃப் 2’, ‘சலார்’ உள்ளிட்டப் படங்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன. அடுத்ததாக ’ஜூனியர் என்டிஆர் 31’ படத்தையும் இயக்கவிருக்கிறார். இப்படங்களை முடித்தப்பிறகே ராம் சரண் படத்தை இயக்கவிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com