நெருங்கிய நண்பரை இழந்துவிட்டேன்: அம்பரீஷ் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்

நெருங்கிய நண்பரை இழந்துவிட்டேன்: அம்பரீஷ் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்

நெருங்கிய நண்பரை இழந்துவிட்டேன்: அம்பரீஷ் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்
Published on

கன்னட நடிகர் அம்பரீஷ் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ் (66). ‘ரிபல் ஸ்டார்’ என்று அழைக்கப்பட்டு வந்த இவர் தமிழ், கன்னடம் உள்பட பல்வேறு மொழிகளில் 208 படங்களில் நடித்துள்ளார். கடைசியாக ‘அம்பி நிமக்கு வயசாகிதே’ என்ற படத்தில் நடித்திருந்தார். இது தமிழில் வெளியான ‘பவர்பாண்டி’ படத்தின் ரீமேக். நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரான இவர், ஆரம்ப காலகட்டத்தில் அவருடன் பிரியா, தாய் மீது சத்தியம் ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். காங்கிரஸ் சார்பில் மத்திய அமைச்சராகவும் இருந்தார்.

உடல் நலக்குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகி இருந்த அம்ரீஷ், சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சிங்கப்பூருக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு நேற்று திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தும் மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். அவரது மறைவு செய்தி கேட்டு கன்னட திரையுலகினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி அறிந்த நடிகர் ரஜினிகாந்த், தனது டிவிட்டர் பக்கத்தில், ‘அம்பரீஷ் அற்புதமான மனிதர். என் நெருங்கிய நண்பர். உங்களை  இழந்து விட்டேன். நிச்சயம் அதற்காக வருந்துகிறேன். உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ராதிகா உட்பட பல நடிகர், நடிகைகள், அம்பரீஷ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com