“நடிகர் ரஜினிகாந்த் சில நாட்களில் வீடு திரும்புவார்” - மருத்துவமனை அறிக்கை

“நடிகர் ரஜினிகாந்த் சில நாட்களில் வீடு திரும்புவார்” - மருத்துவமனை அறிக்கை

“நடிகர் ரஜினிகாந்த் சில நாட்களில் வீடு திரும்புவார்” - மருத்துவமனை அறிக்கை
Published on

நடிகர் ரஜினிகாந்த் சில நாட்களில் வீடு திரும்புவார் என்று காவேரி மருத்துவமனை தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக மருத்துவமனை சார்பில் வெளியாகியுள்ள அறிக்கையில், “ரஜினி சிறு தலைசுற்றல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இங்கு மருத்துவ நிபுணர்களின் சிகிச்சைக்கு பிறகு ரஜினிகாந்த் உடல்நலம் தேறி வருகிறார். சிகிச்சைக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் சில நாட்களில் வீடு திரும்புவார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று ரஜினிகாந்த் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, வழக்கமான உடல் பரிசோதனைக்குதான் ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த் விளக்கம் கொடுத்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com