சினிமா
கமல்ஹாசனிடம் ஜாக்கிரதையாக இருப்பேன்: ரஜினிகாந்த்
கமல்ஹாசனிடம் ஜாக்கிரதையாக இருப்பேன்: ரஜினிகாந்த்
நடிகர் கமல்ஹாசனை போன்று கோபக்காரரை நான் பார்த்ததேயில்லை. எனவே அவரிடம் ஜாக்கிரதையாக இருப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
கமல்ஹாசனின் சகோதரர் சந்திரஹாசனின் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஷால் உள்ளிட்ட திரைப்படத் துறையினரும் இதில் பங்கேற்று தங்கள் அஞ்சலியை செலுத்தினர்.
அப்போது பேசிய ரஜினிகாந்த், கமல்ஹாசனை போன்று ஒரு கோபக்காரரை நான் பார்த்ததேயில்லை. அவருடைய கோபத்தை நீங்கள் பத்து சதவீதம் தான் பார்த்து இருக்கிறீர்கள். நான் 100 சதவிகிதம் பார்த்து இருக்கிறேன். ஆனால் அவரையே அதட்டி சொல்வது சந்திரஹாசன் தான். ஆனால் இப்பொழுது அவர் இல்லை என்று கூறினார். கமல்ஹாசனின் பொருளாதாரத்தை காத்தவர் சந்திரஹாசன் தான் எனவும் ரஜினிகாந்த் குறிப்பிட்டார்.