“சூர்யா கருத்தை ஆமோதிக்கிறேன்” - ஆதரவளித்த ரஜினிகாந்த்

“சூர்யா கருத்தை ஆமோதிக்கிறேன்” - ஆதரவளித்த ரஜினிகாந்த்
“சூர்யா கருத்தை ஆமோதிக்கிறேன்” - ஆதரவளித்த ரஜினிகாந்த்

புதிய கல்விக் கொள்கை தொடர்பான நடிகர் சூர்யா கருத்தை ஆமோதிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யாவின் ‘காப்பான்’ பட இசை வெளியிட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “தமிழாற்றுப்படை புத்தக்கதை படித்தவுடன் வைரமுத்து மீது இன்னும் மதிப்பு அதிகமானது. தமிழாற்றுப்படையில் தமிழ் பற்றிய தகவல்கள் அனைத்தும் உள்ளது. நானும் கேவி ஆனந்த்துடன் படம் செய்திருக்கவேண்டியது. ஆனால் அதை நான் தான் தவறவிட்டுவிட்டேன். மோகன்லால் இயற்கையான நடிகர். கமலின் இந்தியன் 2 நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்தினம் இயக்க உள்ளார். இப்படம் எப்படி வரும் என ஆவலாக காத்திருக்கிறேன். தர்பார் படம் நல்லபடியாக வந்துகொண்டு இருக்கிறது. புதிய கல்விக் கொள்கை குறித்து ரஜினி பேசினால் மோடிக்கு கேட்டிருக்கும் என்று சொன்னார்கள். ஆனால் சூர்யா பேசியே மோடிக்கு கேட்டுள்ளது. அவர் கருத்தை நான் ஆமோதிக்கிறேன். சூர்யாவின் இன்னொரு முகம் சில நாட்களுக்கு முன் தெரிந்தது” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com