\
ஏப்ரல் 14 ‘காலா’ வெளியீடு? தள்ளிப்போகும் 2.0!

ஏப்ரல் 14 ‘காலா’ வெளியீடு? தள்ளிப்போகும் 2.0!

ஏப்ரல் 14 ‘காலா’ வெளியீடு? தள்ளிப்போகும் 2.0!
Published on

ரஜினிகாந்த் நடிக்கும் ‘காலா’ திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி ரீலிஸ் ஆவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கபாலியை தொடர்ந்து ஷங்கரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள பிரம்மாண்ட திரைப்படம் 2.0. இந்தப் படத்தின் மேக்கிங் வீடியோ சில மாதம் முன்பு வெளியாகி படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது. இதை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் ரஜினிகாந்த் ‘தாதா’வாக வலம் வந்துள்ள திரைப்படம் ‘காலா’. முழுக்க முழுக்க மும்பை தாதா கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தின், புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆனது. 

இந்த இரண்டு படங்களில் 2.0 முதலில் வெளியிடப்படும் என்றும், அதன்பின்னர் ‘காலா’ களத்திற்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 2.0 படத்தின் கிராபிக்ஸ் பணிகள் நிறைவு பெற மேலும் காலா அவகாசம் தேவைப்படுவதால், முதலில் காலா படத்தை வெளியிட படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை நடிகர் தனுஷின் ‘வுண்டர்பார்’ தயாரித்து வருகிறது. எனவே திரைப்படம் வெளியீடு தொடர்பான உறுதியான தகவலை அவர் ட்விட்டர் பக்கத்தில் விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com