“வண்ணம் எணஞ்சே நின்னாதான் வானவில்லு” - துள்ளம் போட வைக்கும் அண்ணாத்தவின் ‘மருதாணி’ பாடல்

“வண்ணம் எணஞ்சே நின்னாதான் வானவில்லு” - துள்ளம் போட வைக்கும் அண்ணாத்தவின் ‘மருதாணி’ பாடல்

“வண்ணம் எணஞ்சே நின்னாதான் வானவில்லு” - துள்ளம் போட வைக்கும் அண்ணாத்தவின் ‘மருதாணி’ பாடல்
Published on

வரும் தீபாவளி திருநாள் அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘அண்ணாத்த’ திரைப்படம். இந்நிலையில், இந்தப் படத்தின் மூன்றாவது பாடலான ‘மருதாணி’ தற்போது லிரிக்கல் வீடியோவாக வெளியிட்டுள்ளது படக்குழு. லிரிக்கல் வீடியோ என்றாலும் சில நொடிகள் ரஜினி பாடுவது போல் காட்சிகள் வருகின்றன.

பாடல் திருமண விழாவிற்காக ஏற்பாடுகள் போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கீர்த்தி சுரேஷ்-க்கு திருமணம் நடப்பது போல் உள்ளது. பெண் வீட்டார் தங்களது பெண்ணின் பெருமைகளை பாடுவது போல் பாடம் எழுதப்பட்டுள்ளது. இந்தப் பாடலில் ரஜினியை தவிர்த்து மீனா, குஷ்பூ, பரோட்டா சூரி, பாண்டிய ராஜன், வேல ராமமூர்த்தி என பெரிய நடிகர் பட்டாளமே வருகிறார்கள். பாடல் கேட்பதற்கும் தாளம் போடும் வகையில் கொண்டாட்ட மனநிலையில் உள்ளது. இதுவும் நிச்சயம் ஹிட் பாடல்தான்.

இந்த பாடலை பாடகர்கள் நாகேஷ் அஸிஸ், அந்தோணி தாசன், வந்தனா சீனிவாசன் பாடியுள்ளனர். பாடலாசிரியர் மணி அமுதவன் எழுதியுள்ளார். படத்திற்கான இசையை டி.இமான் அமைத்துள்ளார். இந்த படத்தை சிவா இயக்கியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com