நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த்முகநூல்

சிகிச்சை முடிந்த நிலையில் நலமுடன் வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்!

சிகிச்சை முடிந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்த நடிகர் ரஜினிகாந்த் நேற்று நள்ளிரவு வீடு திரும்பினார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Published on

கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் வயிற்று வலி, லேசான நெஞ்சுவலி காரணமாக இரவு 10.30 மணியளவில் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வயிற்றுப்பகுதியில் லேசான வீக்கம் இருப்பது முதற்கட்ட சோதனையில் தெரியவந்தது.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்ட்விட்டர்

மேலும், அவருக்கு நெஞ்சுவலியும் ஏற்பட்டதால் இதயத்துக்கு செல்லும் ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளதா என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

நடிகர் ரஜினிகாந்த்
உடல்நிலை சீரானதை அடுத்து, தனி அறைக்கு மாற்றப்பட்டார் ரஜினிகாந்த்!

இந்நிலையில், அடிவயிற்றில் ரத்த நாள நரம்பில் வீக்கம் இருப்பது கண்டறியப்படவே, அதற்கான காரணம் என்ன என பரிசோதனை செய்யப்பட்டது. இந்தநிலையில், வீக்கத்தை சரி செய்ய அவருக்கு ஸ்டெண்ட் பொருத்தப்பட்டது. இதனையடுத்து தனி அறைக்கு மாற்றப்பட்ட ரஜினிகாந்த விரைவில் வீடு திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், மருத்துவ கண்காணிப்பில் இருந்த ரஜினிகாந்த நேற்று நள்ளிரவு 11 மணி அளவில் வீடு திரும்பி இருக்கிறார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com