”புனித் ராஜ்குமார் மறைவை எனக்கு இரண்டு நாட்கள் கழித்துதான் சொன்னார்கள்” - ரஜினிகாந்த்

”புனித் ராஜ்குமார் மறைவை எனக்கு இரண்டு நாட்கள் கழித்துதான் சொன்னார்கள்” - ரஜினிகாந்த்

”புனித் ராஜ்குமார் மறைவை எனக்கு இரண்டு நாட்கள் கழித்துதான் சொன்னார்கள்” - ரஜினிகாந்த்
Published on

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவிற்கு நடிகர் ரஜின்காந்த் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

அவர், இன்று வெளியிட்டுள்ள ஆடியோவில்

''எனக்கு சிகிச்சை முடிந்து நல்லா குணமாகி வருகிறேன். நான் ஆஸ்பத்திரியில் இருக்கும்போது புனித் ராஜ்குமார் அகால மரணம் அடைந்திருக்கிறார். அந்த விஷயம் எனக்கு இரண்டு நாள் கழித்துத்தான் சொன்னார்கள். அதை கேட்டு நான் ரொம்ப ரொம்ப வேதனைப்பட்டேன். கஷ்டமாக இருந்தது. புனித் என் கண்ணுக்கு முன்னால் வளர்ந்த குழந்தை. திறமையான அன்பும் பண்பும் கொண்ட அருமையான குழந்தை. நல்ல பெயரும் புகழும் உச்சியில் இருக்கும்போதே இந்த சின்ன வயதில் நம்மை விட்டு அவர் மறைஞ்சிருக்கார்.

அவரது இழப்பு கன்னட சினிமா துறையால் ஈடு கட்டவே முடியாது. அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்ல எனக்கு வார்த்தைகளே இல்லை. புனித் ஆத்மா சாந்தி அடையட்டும்” என்று உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com