\
’தலைவி’ படம் பார்த்துவிட்டு படக்குழுவை பாராட்டிய ரஜினிகாந்த்?

’தலைவி’ படம் பார்த்துவிட்டு படக்குழுவை பாராட்டிய ரஜினிகாந்த்?

’தலைவி’ படம் பார்த்துவிட்டு படக்குழுவை பாராட்டிய ரஜினிகாந்த்?
Published on

கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியாகியுள்ள 'தலைவி’ படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘தலைவி’ படத்தை ஏ.எல் விஜய் இயக்கியுள்ளார். நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாகவும், எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சாமியும் நடித்திருக்கிறார்கள். தமிழ், இந்தி, தெலுங்கு என மும்மொழிகளில் ’தலைவி’ படம் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்தநிலையில், நடிகர் ரஜினிகாந்த் ‘தலைவி’ படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் ஏ.எல் விஜய்யை போனில் தொடர்புகொண்டு படத்தையும் படக்குழுவையும் பாராட்டியிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com