’இன்னொரு டீ சாப்பிடலாமா’ : வெளியானது ‘பேட்ட’ படத்தின் நீக்கப்பட்ட மாஸ் காட்சி

’இன்னொரு டீ சாப்பிடலாமா’ : வெளியானது ‘பேட்ட’ படத்தின் நீக்கப்பட்ட மாஸ் காட்சி
’இன்னொரு டீ சாப்பிடலாமா’ : வெளியானது ‘பேட்ட’ படத்தின் நீக்கப்பட்ட மாஸ் காட்சி
ரஜினியின் ’பேட்ட’ படம் வெளியாகி மூன்று வருடங்கள் நிறைவடைந்ததையொட்டி படக்குழுவினர் டெலிட்டட் சீன்களை தற்போது வெளியிட்டுள்ளனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினி - சிம்ரன் - நவாசுதீன் சித்திக், விஜய் சேதுபதி - சசிக்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் ‘பேட்ட’ ஜனவரி 10 இதேநாளில்தான் வெளியானது. மாஸ் ஹீரோ ரஜினியை வைத்து சில முற்போக்கு சிந்தனையோடு ‘பேட்ட’ கதைக்களத்தை உருவாக்கியிருந்தார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்.

குறிப்பாக, தந்தை இறந்துவிட்டாலே அம்மா தங்களுக்காகவே வாழவேண்டும் என்று நினைக்கும் பிள்ளைகள் மற்றும் சமூகத்திற்கு மத்தியில் ’அம்மாவும் ஒரு பெண் தான்: அவளுக்கும் உணர்வுகள் இருக்கும்’ என்பதை புரிந்து அம்மாவின் காதலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் மேகா ஆகாஷ் கதாபாத்திரம் ரசிக்க வைத்தது. அதற்கேற்றபடி, இளமைத்துள்ளலுடன் அமைக்கப்பட்ட ரஜினி-சிம்ரன் காதல் காட்சிகள் தமிழ் சினிமாவுக்கு செம்ம ஃப்ரெஷ். ’அம்மாவுக்கு மறுமணம் செய்துவைத்த பிள்ளைகள்’ செய்திகள் தற்போதெல்லாம் நிஜத்தில் நிகழ்ந்துகொண்டிருப்பதே ‘பேட்ட’ படத்தின் உண்மையான வெற்றி. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் கொண்டாடப்பட்ட ‘பேட்ட’ வெளியாகி இன்றுடன் மூன்று வருடங்கள் நிறைவடைந்ததையொட்டி டெலிட்டட் சீன்களை வெளியிட்டுள்ளது படக்குழு.
ஜித்து விஜய் சேதுபதியை ’நீ என் மகன்’ என்று நம்ப வைத்து ஏமாற்றுவதற்கு முன்பு எடுக்கப்பட்டக் காட்சிகள் வெளியாகியுள்ளன. ‘டீ சாப்பிடலாம்னு யோசிக்கிறேன்’, ‘இருப்பா டீ நல்லாருக்கு சாப்ட்டு போகலாம்’, ‘இன்னொரு டீ சாப்பிடலாமா’ என்று டீயை ’டீப்’பாக குடித்துக்கொண்டே விஜய் சேதுபதியை எப்படி ஏமாற்றலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கும் ரஜினி... நவாசுதீன் சித்திக்கிடம் அறை வாங்கிய கடுப்பான மனநிலையில் அமர்ந்துகொண்டே துள்ளலுடன் நடனமாடும் விஜய் சேதுபதி காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com