\
அருவி படத்தால் நெகிழ்ந்த ரஜினி: இயக்குநர், நாயகிக்கு தங்கசெயின் பரிசளித்து கௌரவம்

அருவி படத்தால் நெகிழ்ந்த ரஜினி: இயக்குநர், நாயகிக்கு தங்கசெயின் பரிசளித்து கௌரவம்

அருவி படத்தால் நெகிழ்ந்த ரஜினி: இயக்குநர், நாயகிக்கு தங்கசெயின் பரிசளித்து கௌரவம்
Published on: 

அருவி படத்தை பார்த்து நெகிழ்ச்சி அடைந்த ரஜினிகாந்த், படத்தின் இயக்குநர் மற்றும் நாயகிக்கு தங்கசெயினை பரிசாக அளித்து பாராட்டியுள்ளார்.

அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் அதிதி பாலன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான படம் ‘அருவி’. சமூக வலைத்தளங்களில் இப்படத்தை புகழ்ந்து பலரும் கொண்டாடி வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமில்லாமல், திரைத்துறையை சேர்ந்த நடிகர், நடிகைகளும் அருவி படத்தை வெகுவாக புகழ்ந்து வருகின்றனர்.

அருவி படத்தை சமீபத்தில் பார்த்து நெகிழ்ச்சி அடைந்த ரஜினிகாந்த், அதன் இயக்குநர் அருண்பிரவை தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது வாழ்த்தினை தெரிவித்திருந்தார். இந்நிலையில், படத்தின் நாயகி அதிதி பாலன் மற்றும் இயக்குநரை நேரில் அழைத்து, சிறப்பான படைப்பை தந்ததற்காக இருவருக்கும் தங்க செயினை பரிசாக வழங்கி ரஜினிகாந்த் கௌரவம் செய்துள்ளார். மேலும் அருவி படத்தின் தயாரிப்பாளர் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபுவுக்கும் ரஜினிகாந்த் தனது வாழ்த்தினை தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com