\
ரஜினிகாந்த் மகள் விவாகரத்து வழக்கு ஜூலை 4ஆம் தேதி தீர்ப்பு

ரஜினிகாந்த் மகள் விவாகரத்து வழக்கு ஜூலை 4ஆம் தேதி தீர்ப்பு

ரஜினிகாந்த் மகள் விவாகரத்து வழக்கு ஜூலை 4ஆம் தேதி தீர்ப்பு
Published on

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவின் விவாகரத்து வழக்கில் ஜூலை 4ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மனமொத்து பிரிவதாக சவுந்தர்யாவும், அவரது கணவர் அஸ்வினும் மனுத்தாக்கல் செய்து ஆறு மாதங்கள் முடிந்த நிலையில் இருவரும் குடும்பநல நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி தங்கள் நிலையை தெரிவித்தனர். இதனை அடுத்து விவகாரத்து தொடர்பான தீர்ப்பு ஜூலை நான்காம் தேதி வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு விவாகரத்து கோடி நீதிமன்றத்தை அவர்கள் நாடினர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com