"எல்லாமே அற்புதம்" பார்த்திபனின் திரைப்படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்
நடிகர் பார்த்திபன் தயாரித்து இயக்கியுள்ள 'ஒத்த செருப்பு' திரைப்படத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்
நடிகர் பார்த்திபன் கடைசியாக ''கோடிட்ட இடங்களை நிரப்புக'' திரைப்படத்தை தயாரித்து இயக்கினார். அதற்கு பிறகு பல திரைப்படங்களில் நடித்து வந்த அவர், தற்போது 'ஒத்த செருப்பு' என்ற திரைப்படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே. அதாவது பார்த்திபன் மட்டுமே இந்த படத்தில் நடித்துள்ளார். ஒரே கதாபாத்திரத்தை சுற்றி இந்தப்படம் உருவாக்கப்பட்டுள்ளதால் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பார்த்திபனின் இந்த புதிய முயற்சிக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் 'ஒத்த செருப்பு' திரைப்படத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்தின் வாழ்த்துச் செய்தியை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பார்த்திபன், உச்ச மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில், ''தனது ஒவ்வொரு படத்திலும் தனித்துத்தை காட்டும் பார்த்திபன் இந்த படத்தின் மூலம் உச்சத்தை தொட்டிருக்கிறார். இது தமிழ் திரையுலகில் புதுமையான, புரட்சியான, பாராட்டுக்குரிய முயற்சி அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.
CAMERA, EDITING, BACKGROUND, MUSIC பின்னணியில் ஒலிக்கும் குரல்கள் அனைத்தும் அற்புதம். படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துகள்’’ என குறிப்பிட்டுள்ளார்