ரஜினிகாந்த்pt
சினிமா
காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம்!
காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு ரஜினிகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இனி இதுபோன்ற தாக்குதலை கனவில்கூட நினைக்காத வகையில் கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று கூறினார்.
மேலும் காஷ்மீரில் அமைதி திரும்புவது எதிரிகளுக்குப் பிடிக்கவில்லை என்றும், தீவிரவாதிகள் மீது மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாகவும்
ரஜினிகாந்த் தெரிவித்தார்.