\
நாளை வெளியாகும் ‘அண்ணாத்த’ ட்ரெய்லர்

நாளை வெளியாகும் ‘அண்ணாத்த’ ட்ரெய்லர்

நாளை வெளியாகும் ‘அண்ணாத்த’ ட்ரெய்லர்
Published on

நாளை ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகிறது.

'தர்பார்' படத்திற்கு பிறகு நடிகர் ரஜினி ’சிறுத்தை’ சிவா இயக்கத்தில் 'அண்ணாத்த' படத்தில் நடித்து முடித்துள்ளார். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இமான் இசையமைத்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் 4-ஆம் தேதி படம் வெளியாகிறது.

இதுவரை படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆயுதபூஜையை முன்னிட்டு படத்தின் டீசர் வெளியானது. ’அண்ணாத்த’ டீசர் யூடியூபில் இதுவரை 10 மில்லியன் பார்வைகளைக் கடந்த நிலையில், நாளை மாலை 6 மணிக்கு ட்ரெய்லர் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com