இந்திய அளவில் ட்ரெண்டிங்: ட்விட்டரை தெறிக்கவிடும் ‘அண்ணாத்த’ புயல்
ரஜினியின் ’அண்ணாத்த’வெளியான இரண்டே நாளில் 100 கோடி வசூல் செய்துள்ளதால் இந்தியளவில் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது.
ரஜினிகாந்த் நடிப்பில் ’அண்ணாத்த’ தீபாவளியையொட்டி கடந்த 4 ஆம் தேதி வெளியானது. 'தர்பார்' படத்திற்கு பிறகு நடிகர் ரஜினி ’சிறுத்தை’ சிவா இயக்கத்தில் 'அண்ணாத்த' படத்தில் நடித்துள்ளார். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். படம் உலகம் முழுக்க 100 கோடி ரூபாய்க்குமேல் வசூல் செய்துள்ளது. உலகம் முழுக்க வெளியான முதல் நாளில் 70 கோடி ரூபாய்யும், இரண்டாம் நாளில் 42 கோடி ரூபாய்யும் வசூல் செய்துள்ளது. மொத்தம் இதுவரை 112 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், ‘அண்ணாத்த’ 100 கோடிக்குமேல் வசூல் செய்துள்ளதால் ட்விட்டரில் இந்தியளவில் இரண்டாவது இடத்தில் ‘அண்ணாத்த’ ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. #AnnaattheStormAtBO என்ற ஹேஷ்டேக்கில் ரஜினி ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.