\
கர்நாடகாவில் ரூ.11 கோடி ரூபாய் வசூல் செய்த ’அண்ணாத்த’

கர்நாடகாவில் ரூ.11 கோடி ரூபாய் வசூல் செய்த ’அண்ணாத்த’

கர்நாடகாவில் ரூ.11 கோடி ரூபாய் வசூல் செய்த ’அண்ணாத்த’
Published on

ரஜினியின் ‘அண்ணாத்த’ படம் கர்நாடகாவில் 11 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் ’அண்ணாத்த’ தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 4 ஆம்ட் தேதி திரைக்கு வந்தது. 'தர்பார்' படத்திற்கு பிறகு நடிகர் ரஜினி ’சிறுத்தை’ சிவா இயக்கத்தில் 'அண்ணாத்த' படத்தில் நடித்துள்ளார். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

அண்ணன் தங்கை பாசக்கதைக்களத்தைக் கொண்ட ‘அண்ணாத்த’ சூப்பர்... சுமார் என்று கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த நிலையில், படம் உலகம் முழுக்க 225 கோடி ரூபாய்க்குமேல் வசூல் செய்துள்ளது. இதில், கர்நாடகாவில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 11 கோடி ரூபாயும், தெலுங்கில் 8 கோடி ரூபாய்யும் வசூல் செய்துள்ளது என்று தகவல் வெளியாகியிருக்கிறது. கர்நாடகாவில் ‘அண்ணாத்த’ தமிழிலேயும், தெலுங்கில் ‘பெத்தண்ணா’ என்ற பெயரிலும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com