\
இரண்டு ஓடிடி தளங்களில் வெளியானது ரஜினியின் ‘அண்ணாத்த’

இரண்டு ஓடிடி தளங்களில் வெளியானது ரஜினியின் ‘அண்ணாத்த’

இரண்டு ஓடிடி தளங்களில் வெளியானது ரஜினியின் ‘அண்ணாத்த’
Published on: 

ரஜினியின் ‘அண்ணாத்த’ படம் இரண்டு ஓடிடி தளங்களில் வெளியாகி இருக்கிறது.

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் ’அண்ணாத்த’ தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 4 ஆம் தேதி திரைக்கு வந்தது. 'தர்பார்' படத்திற்கு பிறகு நடிகர் ரஜினி ’சிறுத்தை’ சிவா இயக்கத்தில் 'அண்ணாத்த' படத்தில் நடித்துள்ளார். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இமான் இசையமைத்துள்ளார்.

அண்ணன் தங்கை பாசக்கதைக்களத்தைக் கொண்ட ‘அண்ணாத்த’ இதுவரை 200 கோடிக்குமேல் உலகம் முழுக்க வசூல் செய்துள்ளது. இந்த நிலையில், தியேட்டர் வெளியீட்டிற்குப்பிறகான டிஜிட்டல் உரிமையை படத்தை தயாரித்த சன் நெக்ஸ்ட் நிறுவனமும், நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருந்தது. அதன்படி 20 நாட்கள் கழித்து இன்று சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்திலும், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்திலும் ‘அண்ணாத்த’ வெளியாகியிருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com