\
ரஜினியின் அடுத்தப் படத்தை இயக்கும் நெல்சன் திலீப்குமார்: அதிகாரபூர்வ அறிவிப்பு

ரஜினியின் அடுத்தப் படத்தை இயக்கும் நெல்சன் திலீப்குமார்: அதிகாரபூர்வ அறிவிப்பு

ரஜினியின் அடுத்தப் படத்தை இயக்கும் நெல்சன் திலீப்குமார்: அதிகாரபூர்வ அறிவிப்பு
Published on

’ரஜினி 169’ படத்தினை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

‘அண்ணாத்த’ படத்திற்குப்பிறகு ரஜினியின் அடுத்தப் படத்தை யார் இயக்கப்போகிறார்கள் என்பதுதான் ரஜினி ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்து வந்தது. இந்த நிலையில், ரஜினியின் 169 வது படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார் என்று படக்குழுவினர் தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள் .

‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தை இயக்கி வரும் நெல்சன் திலீப்குமார் அடுத்ததாக ரஜினியுடன் இணைந்திருப்பது பெரிய எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.  அனிருத் இசையமைக்கிறார். தற்போது வெளியிட்டுள்ள புரோமோ டீசரில் நெல்சன், அனிருத் நின்றிருக்க 'பிளாக்கில் பியூட்டியாக’ செம்ம ஸ்டைலாக ரஜினி அமர்ந்திருப்பது கவனம் ஈர்த்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com