“நாம ஜெயிச்சிட்டோம்னு சொல்லி ரஜினி சார் சந்தோஷப்பட்டார்” – சிறுத்தை சிவா

“நாம ஜெயிச்சிட்டோம்னு சொல்லி ரஜினி சார் சந்தோஷப்பட்டார்” – சிறுத்தை சிவா
“நாம ஜெயிச்சிட்டோம்னு சொல்லி ரஜினி சார் சந்தோஷப்பட்டார்” – சிறுத்தை சிவா

‘அண்ணாத்த’ படம் வெளியான பிறகு நடிகர் ரஜினி என்ன சொன்னார் என்பதை உற்சாகமுடன் தெரிவித்திருக்கிறார் இயக்குநர் சிறுத்தை சிவா.

’சிறுத்தை’ சிவா இயக்கத்தில் ரஜினி – நயன்தாரா நடித்துள்ள ‘அண்ணாத்த’ தீபாவளியையொட்டி கடந்த 4 ஆம் தேதி வெளியானது. கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பிரகாஷ் ராஜ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டப் பெரும் நடிகர் பட்டாளமே போட்டிப்போட்டு நடித்துள்ளனர். படம் இரண்டே நாளில் 100 கோடி ரூபாய்க்குமேல் வசூலைக் கடந்தது. வடகிழக்கு பருவமழை சூழலிலும் ‘அண்ணாத்த’ படத்தை குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக மக்கள் தியேட்டருக்குச் சென்று ரசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், ’அண்ணாத்த’ வெளியாகி ஓடிக்கொண்டிருப்பது குறித்து ரஜினி என்ன சொன்னார் என்பதை இயக்குநர் சிறுத்தை சிவா ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அதில், “படம் வெளியானபிறகு ரஜினி என்ன சொன்னார்?” என்று  கேட்டதற்கு ”அண்ணாத்த ப்ளாக் ஃபஸ்டர் ஹிட் என்பதால் அடிக்கடி ரஜினி சாரிடம் பேசுகிறேன். ஒவ்வொரு முறையும் ரஜினி சாரிடம் போனில் பேசும்போது சந்தோஷத்துடன் ”சிவா சார்… படம் பெரிய சக்சஸ்ங்கிறாங்க சிவா சார்…. நாம ஜெயிச்சிட்டோம் சிவா சார்” என்பார். அவர், அப்படி பேசுவதை கேட்பதற்கே எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும்” என்று உற்சாகமுடன் தெரிவித்துள்ளார் சிவா.                                         

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com