\
ஆகஸ்டில் ’ரஜினி 169’ படப்பிடிப்பு: பிறந்தநாளில் ஃபர்ஸ்ட் லுக் - ரிலீஸ் எப்போது?

ஆகஸ்டில் ’ரஜினி 169’ படப்பிடிப்பு: பிறந்தநாளில் ஃபர்ஸ்ட் லுக் - ரிலீஸ் எப்போது?

ஆகஸ்டில் ’ரஜினி 169’ படப்பிடிப்பு: பிறந்தநாளில் ஃபர்ஸ்ட் லுக் - ரிலீஸ் எப்போது?
Published on

‘ரஜினி 169’ படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் துவங்கவுள்ளது.

‘அண்ணாத்த’ படத்திற்குப்பிறகு மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ‘ரஜினி 169’ படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் பிரியங்கா மோகன் மற்றும் வடிவேலு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் என்று தகவல் வெளியானது. நடிகை ரம்யா கிருஷ்ணனும் ஒப்பந்தமாகியுள்ளார் என்று சொல்லப்படுகிறது. ’பீஸ்ட்’ வசூலிலும் விமர்சனங்களிலும் பின்னுக்குப் போனதால், கட்டாயம் ஹிட் கொடுத்தே ஆகவேண்டும் என்ற முனைப்பில் படத்தின் முன் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் நெல்சன் திலீப்குமார்.

இந்த நிலையில், ‘ரஜினி 169’ படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் துவங்கவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ரஜினியின் 73 வது பிறந்தநாளான வரும் டிசம்பர் 12 ஆம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கையும் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது என்றும் சொல்லப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com