நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது - தர்பார் இசை வெளியீட்டில் பேசிய ரஜினிகாந்த்!

நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது - தர்பார் இசை வெளியீட்டில் பேசிய ரஜினிகாந்த்!

நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது - தர்பார் இசை வெளியீட்டில் பேசிய ரஜினிகாந்த்!
Published on

ரஜினிகாந்த் நடித்து பொங்கலுக்கு வெளியாக இருக்கும் "தர்பார்" படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் இயக்குநர் முருகதாஸ், நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், அனிருத் மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர். 

விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், ''ரமணா பார்த்தபோதே முருகதாஸை எனக்குப் பிடித்துவிட்டது. கஜினி முடித்ததும் அவரும் நானும் படம் பண்ண பேச்சுவார்த்தை நடந்தது. ஆனாலும் தள்ளிப்போய்விட்டது. வயசாகிவிட்டது. இனி டூயட் எல்லாம் வேண்டாம் என முடிவெடுத்து கபாலி, காலா படங்களில் நடிக்கத் தொடங்கினேன்.

நான் 160க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும், தர்பார் படம் ஸ்டைலாக, த்ரில்லாக இருக்கும்.  சந்திரமுகி படத்தைக் காட்டிலும், நயன்தாரா கிளாமராகவும் எனர்ஜியாகவும் இருக்கிறார். 

இசையமைப்பாளர்களில் இளையராஜாவிற்கு நிகரான இசை ஞானம் படைத்தவர்கள் யாரும் கிடையாது.
அந்த திறமை அனிருத்துக்கு இப்போதே இருக்கிறது. வரும் 12ம் தேதி முக்கியமான நாள். 69 வயதில் இருந்து 70 வது வயதில் அடியெடுத்து வைக்கிறேன். 

வழக்கம்போல் அன்றைய தினம் நான் ஊரில் இருக்க மாட்டேன். என் பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம். நல்ல நடிகன் ஒருவன் வந்தால் ரஜினி என பெயர் வைக்க வேண்டுமென பாலச்சந்தர் யோசித்துவைத்திருந்த ஒரு பெயரைத் தான் எனக்கு அவர் வைத்தார். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. அதேபோல் நீங்களும் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது

தமிழக அரசு மீது பல விமர்சனங்களை இருந்தாலும், இந்த அரங்கை இசை வெளியீட்டு விழாவிற்கு கொடுத்ததற்கு நன்றி என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com