நடிகை விஜயலட்சுமிக்கு ஆறுதல் கூறிய ரஜினிகாந்த்

நடிகை விஜயலட்சுமிக்கு ஆறுதல் கூறிய ரஜினிகாந்த்

நடிகை விஜயலட்சுமிக்கு ஆறுதல் கூறிய ரஜினிகாந்த்
Published on

உதவி வேண்டி கோரிக்கை விடுத்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தன்னை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியதாக நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

விஜய்யின் பிரண்ட்ஸ் படத்தின் மூலம் பிரபலமான நடிகை விஜயலட்சுமி, தற்போது பெங்களூருவில் வசித்து வருகிறார். இந்நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர், தான் தமிழ்ப் பெண் என்பதால் கன்னட திரையுலகில் சினிமா வாய்ப்பு மறுக்கப்படுவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் தான் உடல் மற்றும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் வேதனையுடன் கூறியிருந்தார். நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க வேண்டும் என்றும், தன்னுடைய பிரச்னைகளை அவர் தீர்த்து வைப்பார் என்றும் விஜயலட்சுமி நம்பிக்கை தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், புதிய வீடியோவை வெளியிட்ட அவர், நடிகர் ரஜினிகாந்த் தன்னை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியதாக தெரிவித்துள்ளார். அனைத்து பிரச்னைகளும் விரைவில் முடிவுக்கு வரும் என நம்பிக்கை அளித்த ரஜினிகாந்த், தனக்கு தேவையான உதவிகளை செய்ய உறுதியளித்ததாக கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com