ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க மும்பை செல்கிறார் ரஜினி

ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க மும்பை செல்கிறார் ரஜினி

ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க மும்பை செல்கிறார் ரஜினி
Published on

ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று இரவு மும்பை செல்கிறார்.

தமிழ், இந்தி உள்ளிட்ட பலமொழி திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்த நடிகை ஸ்ரீதேவி நேற்றிரவு காலமானார். ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள அவரது மரணத்திற்கு குடியரசுத் தலைவர், பிரதமர், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் ஆழ்ந்த  இரங்கலை தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களும் ஸ்ரீதேவியின் நடிப்பில் கவர்ந்த காட்சிகளை சமூகவலைதளங்களில் பகிர்ந்து தங்களது இரங்கல் குறிப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.

இதனிடையே ஸ்ரீதேவியின் உடலை துபாயிலிருந்து இந்தியாவிற்கு கொண்டுவரும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதாக நடிகர் ரஜினிகாந்த் மும்பை செல்கிறார். இன்றிரவு சென்னை விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் ரஜினி மும்பை செல்லவுள்ளார். நாளை நண்பகலில் ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கு நடைபெறும் எனத் தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com