தேநீர் அருந்தும் ரஜினி - நயன்தாரா: கவனம் ஈர்க்கும் அண்ணாத்த ’சாரக்காற்றே’ பாடல்

தேநீர் அருந்தும் ரஜினி - நயன்தாரா: கவனம் ஈர்க்கும் அண்ணாத்த ’சாரக்காற்றே’ பாடல்

தேநீர் அருந்தும் ரஜினி - நயன்தாரா: கவனம் ஈர்க்கும் அண்ணாத்த ’சாரக்காற்றே’ பாடல்
Published on

ரஜினியின் ’அண்ணாத்த’ படத்தின் இரண்டாம் பாடல் ’சாரக்காற்றே’ தற்போது வெளியாகியுள்ளது.

'தர்பார்' படத்திற்கு பிறகு நடிகர் ரஜினி ’சிறுத்தை’ சிவா இயக்கத்தில் 'அண்ணாத்த' படத்தில் நடித்து முடித்துள்ளார். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் 4-ஆம் தேதி படம் வெளியாகிறது.

மறைந்த பாடகர் எஸ்.பி.பி கடைசியாக பாடிய ‘அண்ணாத்த அண்ணாத்த’ பாடல் கடந்த 4 ஆம் தேதி வெளியான நிலையில், ரஜினிக்கும் நயன்தாராவுக்குமான ‘சாரக்காற்றே’ பாடல் தற்போது வெளியாகி இருக்கிறது. ஷ்ரேயா கோஷல் - சித் ஸ்ரீராம் குரலில் யுகபாரதி எழுதியுள்ள ‘சாரக்காற்றே’ அஜித்தின் ’விஸ்வாசம்’ படத்தின் ‘வானே வானே’ பாடலை கொஞ்சம் நினைவூட்டினாலும் நயன்தாராவின் காஸ்டியூமும் ரஜினியும் இளமைத் துள்ளலாலும் கவனம் ஈர்க்கின்றது. குறிப்பாக, பாடலின் கடைசியில் ரஜினியும் நயன்தாராவும் தேநீர் அருந்தும் காட்சிகள் இன்னும் ரசிக்க வைக்கின்றன. இந்தக் காட்சியையும் புகைப்படத்தையும் ரஜினி - நயன்தாரா ரசிகர்கள் ட்விட்டரில் வைரலாக்கி வருகிறார்கள்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com