\
"அண்ணாத்த திருவிழா ஆரம்பம்": நாளை வெளியாகும் ’அண்ணாத்த’ ஃபர்ஸ்ட் லுக்

"அண்ணாத்த திருவிழா ஆரம்பம்": நாளை வெளியாகும் ’அண்ணாத்த’ ஃபர்ஸ்ட் லுக்

"அண்ணாத்த திருவிழா ஆரம்பம்": நாளை வெளியாகும் ’அண்ணாத்த’ ஃபர்ஸ்ட் லுக்
Published on: 

ரஜினியின் ’அண்ணாத்த’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விநாயகர் சதுர்த்தியையொட்டி நாளை வெளியாகிறது.

'தர்பார்' படத்திற்கு பிறகு நடிகர் ரஜினி ’சிறுத்தை’ சிவா இயக்கத்தில் 'அண்ணாத்த' படத்தில் நடித்து முடித்துள்ளார். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் 4-ஆம் தேதி படம் வெளியாகிறது.

சென்னையில் படமாக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு, பின் ஹைதராபாத், மேற்குவங்கம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றதைத் தொடர்ந்து இறுதிக்கட்டப் படப்பிடிப்பு, கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி நிறைவடைந்தது. இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தியையொட்டி நாளை ’அண்ணாத்த’ ஃபர்ஸ்ட் லுக் வெளியாகிறது என்று படக்குழு தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. நடிகர் தனுஷும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ‘வா தலைவா வா’ என்று உற்சாகமுடன் ரசிகராக பகிர்ந்திருக்கிறார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com