\
கும்கி-2 வில் நாயகியாகும் இதுதாண்டா போலீஸ் ராஜசேகர் மகள்

கும்கி-2 வில் நாயகியாகும் இதுதாண்டா போலீஸ் ராஜசேகர் மகள்

கும்கி-2 வில் நாயகியாகும் இதுதாண்டா போலீஸ் ராஜசேகர் மகள்
Published on

’இதுதாண்டா போலீஸ்’ பட நாயகன் ராஜசேகரை நினைவிருக்கிறதா? அவரது மகள் ஷிவானி கும்கி-2 படத்தில் ஹீரோயினியாக அறிமுகமாக இருக்கிறார். இவரது அம்மா ஜீவிதாவும் ஒரு காலத்தில் நாயகியாக நடித்தவர்தான்.  ‘கும்கி பார்ட்-2வில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன். ஸ்கிரீன் டெஸ்ட் எல்லாம் முடிந்து விட்டது’ என்கிறார் ஷிவானி.  பரதநாட்டியம், குச்சிப்புடி, கீபோர்டு, கிட்டார், வீணை  என நடனத்திலும் இசையிலும் மட்டுமல்ல. கிக்பாக்ஸிங்கிலும் ஷிவானி கில்லாடியாம். 
2012ம் ஆண்டு வெளிவந்த கும்கி பிரபு சாலமனின் திரையுலக வாழ்க்கையில் மைல் கல்லாய் அமைந்தது. மீண்டும் அவர் எடுக்க இருக்கும் கும்கி-2 வில் விக்ரம் பிரபுவே நாயகனாக நடிக்க இருக்கிறார். ஜூலையில் படவேலைகள் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.  

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com