"ரகுவரனின் ஃபேவரிட் புகைப்படம்!" - ரோகிணி சிறப்புப் பகிர்வு

"ரகுவரனின் ஃபேவரிட் புகைப்படம்!" - ரோகிணி சிறப்புப் பகிர்வு

"ரகுவரனின் ஃபேவரிட் புகைப்படம்!" - ரோகிணி சிறப்புப் பகிர்வு
Published on

மறைந்த நடிகர் ரகுவரனின் பிறந்தநாளையொட்டி ரோகிணி, ரகுவரனுக்கு பிடித்த அவரது புகைப்படத்தைப் பகிர்ந்து நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக பார்க்கப்படும் ரகுவரன் கடந்த 1958 ஆம் ஆண்டு இதே டிசம்பர் 11 ஆம் தேதி கேரளாவில் பிறந்தார். கேரளாவாக இருந்தாலும், அவர் படித்து வளர்ந்ததெல்லாம் தமிழகத்தின் கோவையில்தான். சிறுவயதிலேயே அவரது குடும்பம் கோவையில் குடியேறிவிட்டது.

சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கும்போது நடிகை ரோகிணியை காதலித்து கடந்த 1996 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு சாய் ரிஷிவரன் என்ற மகனும் இருக்கிறார். கடந்த 2004 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் முறைப்படி விவாகரத்து பெற்றனர். தனித்தனியே வசித்து வந்தபோது நடிகர் ரகுவரன் உடல்நலக்குறைவால் கடந்த 2008 ஆம் ஆண்டு காலமானார்.

    அவர் மறைந்து 12 ஆண்டுகள் ஆனாலும், அவரை விவாகரத்து செய்திருந்தாலும் ரகுவரனின் மீதான அன்பு அப்படியேதான் இருக்கிறது என்பதை எப்போதும் நினைவுகூர்த்துகொண்டே இருக்கிறார், நடிகை ரோகிணி. அவரின், பிறந்தநாள், நினைவு நாட்கள் மட்டுமல்ல.

தனது சமூக வலைதளங்களில், ரகுவரன் குறித்த நினைவுகளை அடிக்கடிப் உருக்கமுடன் பகிர்ந்துகொள்வார். அப்படித்தான், இன்று ரகுவரனின் பிறந்தநாளையொட்டி “இது அவரின் ஃபேவரைட் புகைப்படம். உங்களை மிஸ் செய்கிறேன்” என்று பதிவிட்டுள்ளதோடு,

ரகுவரனுடன் இருக்கும் தனக்குப் பிடித்த புகைப்படத்தையும் பகிர்ந்து ”என்னுடைய ஃபேவரைட் புகைப்படம் இது” என்று இரண்டு புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com