ஹீரோவாக அறிமுகமாகும் நடிகர் ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின்
நடிகர் ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் ஹீரோவாக அறிமுகமாகும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் ஹீரோவாக அறிமுகமாகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ’காஞ்சனா 2’ படத்தில் இடம்பெற்ற ‘சில்லாட்ட பில்லாட்ட’ பாடலில் லாரன்ஸுடன் போட்டிப்போட்டுக்கொண்டு நடனம் ஆடி கவனம் ஈர்த்தார் எல்வின். சொந்தமாக நடனப் பயிற்சி பள்ளி வைத்திருக்கும் எல்வின் சமீபத்தில் நடிக்கவிருப்பதாக அறிவித்தார்.
அதன்படி, இன்று அவரது பிறந்தநாளையொட்டி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஹீரோவாக எல்வினும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ராஜ்கிரனும் நடிக்கிறார்கள். இயக்குநர், மற்ற நடிகர்கள் குறித்த தகவல் பின்பு வெளியாகும் என்று ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனர் டில்லி பாபு அறிவித்திருக்கிறார். ஏற்கனவே, இந்நிறுவனம் சூப்பர் ஹிட் அடித்த ‘ராட்சசன்’, ‘ஓ மை கடவுளே’ படங்களை தயாரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.