“குடும்ப வறுமைக்காக கார் கழுவினேன்”- தெரசா விருதில் ராகவா லாரன்ஸ்

“குடும்ப வறுமைக்காக கார் கழுவினேன்”- தெரசா விருதில் ராகவா லாரன்ஸ்

“குடும்ப வறுமைக்காக கார் கழுவினேன்”- தெரசா விருதில் ராகவா லாரன்ஸ்
Published on

நடிகர் ராகவா லாரன்ஸின் சேவையை பாராட்டி அவருக்கு அன்னை தெரசா விருது வழங்கப்பட்டுள்ளது.

திரை வாழ்க்கையை தாண்டி சமூக சேவையில் ஈடுபட்டு வருபவர் நடிகர் ராகவா லாரன்ஸ். இவருக்கு ஒரு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் அன்னை தெரசா விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் மாற்றுத் திறனாளிகள் பலரின் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது.

இதில் பேசிய ராகவா லாரன்ஸ், “இந்த உலகத்தில் உள்ள கடவுள்களில் முதல் கடவுளாக நான் நினைப்பது தாயைத்தான். நாங்கள் ராயபுரத்தில் இருந்தபோது எனக்கு 10 வயது. அப்போது நான் பிரெயின் ட்யூமர் நோயால் பாதிக்கப்பட்டிருந்தேன் அங்கிருந்து தன் தோளில் தூக்கிக் கொண்டே ஸ்டான்லி மருத்துவமனைக்கு என்னை என் அம்மா கொண்டு வருவார். பஸ்ஸுக்குகூட காசு இல்லாததால், அன்றைக்கு நம்பிக்கையுடன் எங்க அம்மா என்னை காப்பாற்றினார். அவர் இல்லை என்றால் இன்றைக்கு நான் இல்லை. அதனால் இந்த விருதை என் அம்மாவுக்கு காணிக்கையாக்குகிறேன்.” என்றார்.

மேலும், “நான் இந்தளவுக்கு உயர்வதற்கு நிறைய பேர் காரணமாக இருந்திருக்கிறார்கள். சூப்பர் சுப்பராயன் மாஸ்டர் எனக்கு கார் கழுவும் வேலை கொடுத்து முதன்முதலில் ஆதரவு அளித்ததார். அங்கிருந்த என்னைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினி சார் ‘நீ டான்ஸரா சேரு என்று அவரே கடிதம் கொடுத்து சேர்த்துவிட்டார். அதன் மூலம் நான் டான்ஸராகி, பிறகு டான்ஸ் மாஸ்டராகி ‘அமர்க்களம்’ மூலம் நடிகரானேன்.  இன்று தயாரிப்பாளர், இயக்குனர் என்று படிப்படியாக உருவாக எவ்வளவோ பேர் உதவி இருக்கிறார்கள். 

ராயபுரத்திலிருந்து கோடம்பாக்கத்துக்கு நானும் எனது அம்மாவும் கூடவே மூன்று சகோதரிகளும் வந்து எப்படியெல்லாம் வறுமையை அனுபவித்தோம் என்பதை சொல்லி மாளாது. ஆனால் பொறுமையாக படிப்படியாக வளர்ந்தோம். நான் சம்பாதிப்பதில் கொஞ்சமாவது மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்து கொடுக்கிறேன். மக்கள் திலகத்தின் ‘தர்மம் தலைகாக்கும்’என்ற பாடலும் சூப்பர் ஸ்டாரின் ‘மரத்தை வெச்சவன் தண்ணீ ஊத்துவான்’ என்ற பாடலை என் மனதில் ஏற்றிக்கொண்டு நான் உதவி செய்து கொண்டு இருக்கிறேன். சாதாரணமாக இருந்த என்னை இந்தளவுக்கு உயர்த்திய மக்கள் கொடுத்த பணத்தை நான் திருப்பி அவர்களுக்கே தருறேன் அவ்வளவுதான்” என்றார் லாரன்ஸ்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com